கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் இரவோடு இரவாக அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடித்தார்கள்.

0
11

13.7.2020

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் இரவோடு இரவாக அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடித்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம்

செங்கம் அடுத்த கரியமங்கலம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில், விநாயகர் கோவில் மற்றும் முறையார் அருகே உள்ள நியூ சென்னை ரெஸ்டாரன்ட், பேக்கரி ஆகிய மூன்று இடங்களில் கடந்த சனிக்கிழமை நல்லிரவு அடையாளம் தெரியாத நபர்கள் கோவில் உண்டியலை உடைத்தும், உணவகத்தில் ரொக்க தொகை கொள்ளையடித்து சென்றதை உணவகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இதனை தொடர்ந்து செங்கம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகிகள் மற்றும் உணவக உரிமையாளர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியை பதிவிறக்கம் செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க கோரி புகார் அளித்தனர்கள். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின்படி காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையிலான தனிப்படை குழு 24 மணி நேரத்தில் கோயில் மற்றும் உணவகத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செங்கம் அடுத்த வலையாம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன், அஜய், சக்திவேல் ஆகிய மூவரையும் இரவோடு இரவாக அதிரடியாக கைது செய்து கொள்ளை அடித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் ஒப்படைத்தார் தப்பியோடிய ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்

மேலும் இதேபோல் கடந்த மாதம் செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திலும், அலுவலக வளாகத்தில் உள்ள அடகு கடை மற்றும் மளிகை கடை போன்ற இடங்களில் ஒரே இரவில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்க)