வாணியம்பாடி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலி. ஒரு மணி நேரம் கிராமமக்கள் போராட்டம். வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வாணியம்பாடி

0
12

வாணியம்பாடி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலி. ஒரு மணி நேரம் கிராமமக்கள் போராட்டம். வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வாணியம்பாடி ஜூலை 10 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி புருஷோத்தும குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் அய்யம்மாள். அவரது கணவர் சுப்பிரமணி உயிரிழந்த நிலையில் அய்யம்மாள் மற்றும் அவரது மகன் அந்தோணிராஜ் என்கிற ராகுல்காந்தி ஆகியோர் அங்கு உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடிசை வீடு இடிந்து விழுந்துள்ளது. அப்போது அய்யம்மாள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் சடலத்தை எடுக்க விடாமல் அப்பகுதி மக்கள் போராடத்தில் ஈடுபட்டனர்,

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அய்யம்மாள் சுப்பிரமணி என்ற பெயரில் 2017-2018 ஆண்டில் வீடு கட்டபட்டதாக வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்து முறைகேட்டில் கிராம ஊராட்சி செயலாளர் வஜ்ரவேல் ஈடுபட்டு உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை கேட்ட வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கிராமிய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.