திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தன் நிலத்தை மீட்டுத் தர வேண்டி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதால் நூதன முறையில் தேசத் தந்தை மகாத்மா காந்தி திருவுருவ சிலை இடம் மனு கொடுத்ததால் செங்கத்தில் பரபரப்பு.

0
18

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தன் நிலத்தை மீட்டுத் தர வேண்டி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நூதன முறையில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசத் தந்தை மகாத்மா காந்தி திருவுருவ சிலை இடம் மனு கொடுத்ததால் செங்கத்தி்ல் பரபரப்பு.

செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் துரைசாமி என்பவர்க்கு சொந்தமான மூன்று ஏக்கர் விளைநில பட்டா ஆவணத்தை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது மாறுதலாகி உள்ளதால் துரைசாமியின் மகன் சிவராமன் என்பவர் தனது தாத்தா மற்றும் தகப்பனார் காலமாகி விட்டதால் தனது பாட்டி பெயரில் நிலப்பட்டா ஆவணத்தை திருத்தம் செய்து தரும்படி கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் துரைசாமி மகன் சிவராமன் என்பவர் முறையாக கோரிக்கை மனுவை அளித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி முறையிட்டார்.

மேலும் கடந்த மூன்று மாத காலங்கள் ஆகியும் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசத்தந்தை மகாத்மாகாந்தி திருஉருவ சிலையிடம் தனது கோரிக்கை மனுவை வழங்கினார். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பொதுமக்களிடம் இந்த கோரிக்கை மனுவை துண்டுப் பிரசுரமாக வழங்கினார்.

செங்கம் செய்தியாளர் ஶ்ரீ. அன்பரசன்