யானை அழிவும் மனிதனின் வாழ்வும்
தொடர்ந்து பலியாகும்
யானைகள் விரைவாக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டி தமிழக அரசை
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளார்
க.முகைதீன் வலியுறுத்தல்.

0
23

யானை அழிவும் மனிதனின் வாழ்வும்
தொடர்ந்து பலியாகும்
யானைகள் விரைவாக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டி தமிழக அரசை
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளார்
க.முகைதீன் வலியுறுத்தல்

தமிழகத்தில் அண்மைக்காலமாக யானைகள் தொடர்ச்சியாக உயிர் இழந்து வருகிறது தெடர் நிகழ்வாக மாறிவிட்டது
இது மிகுந்த கவலை அளிக்கிறது இதனை தடுப்பது முதன்மை பணியாகும்

கோவை நீலகரி மாவட்டங்களில் கடந்த 3 மாதத்தில் 13 மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிர் இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது

ஒரு நாட்டின் வளம் காட்டின்வளம் யானைகளிடம்தான் அடங்கியிருக்கிறது இந்த உலகில் எல்லா உயிரினமும் வாழும் உரிமைகள் அவற்றிக்கு உண்டு இதனைப்போல் யானைக்கும் அது வாழம் உரிமை உண்டு
மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை

யானைகள் பயன்கள்
சுற்றுச் சூழலின் ஆரோக்கியத்தை காட்டும் அடையாளமாக கருதப்படுகிறது காடுகள்

இதனைப்போல் விலங்குகள் அழியாமல் பாதுகாக்க வேண்டுமானால் காடுகளில் யானைகள் எண்ணிக்கை அதிகாரிக்க வேண்டும் இதனால் காடுகளில் வழித்தடங்களை யானைகள் உருவாக்கும்

இதனைப்போல் காட்டு விலங்குகளில் அழிவு காடுகளை மட்டும் பாதிக்காது மாறாக அது மனிதனை சமுகத்தை சேர்த்துத்தான் பாதிக்கும்

உதாரணமாக ஒரு யானை இறந்தால் அதனை சுற்றியுள்ள காடுகளில் 16 வகையான தாவரங்கள் அழிந்து போகும் என்பது ஆராய்ச்சி யாளார்கள் கூறுகின்றார்கள்

காடுகளை அழிவில் இருந்து காப்பது யானை மட்டுமே யானைகள் இனம் அழிந்தால் உலக சுவாசம் காற்று நிறுத்துவதற்கு சமம் நிகழ்வாக கருதப்படுகிறது

காடுகளை உருவாக்கும் யானைகள் இல்லாமல் போனால் காடுகள் அழிந்து போகும் இதனால் நல்ல சுத்தமான காற்று இல்லாமல் போய்விடும்
இதனால் மனிதர்களுக்குதான் பாதிப்பு எனவே

யானைகளின் உயிர் இழப்பை சாதரணமாக எடுத்துக் கொள்ளவது மிகுந்த பின் விளைவுகளை சந்திக்கும் மனித சமுகம்தான் என்பதை உணர வேண்டும்

யானைகள் தொடர்ச்சியாக உயிர் இழப்பு எற்படுவதை தடுக்கும் விதமாக காடுகளை அழிப்பதை தடுக்க வேண்டும்
காடுகளை அழிப்பதால் யானைகளுக்கு உண்ணுவதற்கும் குடிக்க நீர் இன்றி ஊருக்குள்ளே வருகிறது விளை நிலைங்களை சேதப்படுத்துகிறது இதற்கு காரணம் காடுகளில் வீடுகளை அமைப்பதும் அவற்றின் வாழ்வு இடங்களை அபகரிக்கும் செயலால் இது போன்றவை நடக்கிறது இதனை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை நீலகரி மாவட்டங்களில் யானைகள் தொடர் உயிர் இழப்பை தகுந்த ஆய்வு செய்து காரணிகளை உடனடி கண்டு அறிந்து நடவடிக்கையை எடுக்க மாவட்டநிர்வாகங்ளுக்கு
உத்தரவு நல்க வேண்டும் தமிழக அரசை வலியுறுத்தி பொது நலன் கருதி இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்

மனிதர்கள் வாழசுவாசம் வேண்டும்
சுவாசம் வேண்டுமெனில் காடுகள் வேண்டும் காடுகள் வாழ வேண்டுமெனில் யானைகள் வாழ வேண்டும்
இதனை உணர்ந்து வாழ கற்றுக்கொள்வோம்