தனியார் பைனான்ஸ் நிறுவனங்களின் வசூல் வேட்டையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

0
21

தனியார் பைனான்ஸ் நிறுவனங்களின் வசூல் வேட்டையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

கடன் வாங்கி சிறுதொழில் செய்யும் சாமானிய மக்கள், தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் ஈட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடனைக் கட்ட வற்புறுத்துவதால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதனையடுத்து, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊரடங்கு காலத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் கடன்தாரகளிடம் கடன் தொகையை வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.