சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல்.

0
18

சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல்

சுவாமி விவேகானந்தரின் 118 வது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுப்பிரமணி சிவா நினைவிடத்தில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் மற்றும் தேசிய மாணவர் சங்கமும் இணைந்து கால்நடைப் பல்கலைக்கழக பேராசிரியர் ரவி தலைமையில் தேசிய ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் துரைசாமி முன்னிலையிலும் 118 மரக்கன்றுகள் நடப்பட்டது.இவ்விழாவில் தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் முருகன் ,கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள் ஜெயப்பிரகாஷ், குமார்,தேசிய மாணவர் சங்கம் சார்பாக நிக்கில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.