ஆமை வேகத்தில் நடந்து வரும் பாலம் கட்டும் பணியால் விபத்துக்குள்ளான கனரக வாகனம்.

0
25

ஆமை வேகத்தில் நடந்து வரும் பாலம் கட்டும் பணியால் விபத்துக்குள்ளான கனரக வாகனம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியம் டி. வேலங்குடி கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக வாகனங்கள் செல்லும் வழியில் ஆழக்குழி ஒன்றைத் தோண்டி அப்பணியை அத்துடன் கிடப்பில் போட்டனர். ஆகவே அந்த வழியில் இன்று காலை சென்ற கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.