ஓடைப்பட்டி பேரூராட்சியில் கடந்த சில வருடங்களாக பல முறை கேடுகள் நடக்கின்றன அதில் ஒரு சில தகவல்களை மட்டும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
கடந்த ஓராண்டிற்கு முன்பு பசுமை வீடு திட்டம் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

0
6

ஓடைப்பட்டி பேரூராட்சியில் கடந்த சில வருடங்களாக பல முறை கேடுகள் நடக்கின்றன அதில் ஒரு சில தகவல்களை மட்டும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

கடந்த ஓராண்டிற்கு முன்பு பசுமை வீடு திட்டம் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது அத்திட்டத்தின் மூலம் ரூபாய் 21௦௦௦௦ (இரண்டு லட்சத்து பத்தாயிரம்) கிடைக்கும் அதன் மூலம் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் வீடு கட்டி பயன் பட்டனர். ஆனால், அதில் சில விஷ கிருமிகளின் விஷ தன்மை மூலம் அந்த மக்களிடம்25௦௦௦ முதல்3௦௦௦௦ வரை வசூல் வேட்டை நடை பெற்றது அதனால் பல மக்கள் பொருளாதார சூழ்நிலையால் இன்னும் வீடு கட்டி முடிக்காமல் இடைத்தரகர்களை நம்பி தெரிவில் நிற்கும் அவலம் ஏற்ப்பட்டது, இதன் காரணமாகத்தான் தற்போது குடிசை மாற்று வாரியத்திற்கு மாற்றப்பட்டது இதன் மூலம் மக்கள் பயன் பெறுகின்றனர் என நம்புகிறேன்.

பாவத்திலும் பெரிய பாவம் குடி தண்ணீர் திருட்டு அது மூர்த்திநாயக்கன் பட்டி எனும் கிராமத்தில் முறை கேடாகவும் சட்ட விரோதமாகவும் ஒரு தனி நபரின் தோட்டத்திற்கு மாட்டு கொட்டகை க்கும் கொண்டு செல்லப்படுகிறது, அது முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது (இது9௦% மூர்த்திநாயக்கன் பட்டி மக்கள் சொல்லும் கருத்து)

வீடு இல்லாத காலி தோட்டமாக இருந்த இடத்திற்கு கட்டிடமே இல்லாமல் வீடு வரி ரசீது பெற்று உள்ளார், அது மட்டும் அல்லாது குடி நீர் இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது

மக்களுக்கு சாதாரணமாக குடிநீர் இணைப்பு 12500 (DD ) மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது ஆனால் ஓடைப்பட்டி பேரூராட்சியில் 15000 முதல் 17000 வரை வசூல் வேட்டை நடை பெறுகிறது இதற்கு ரசீது கிடையாது இதில் தற்காலிக பணியாளர் சரவணன் முன்னால் கவுன்சிலர் செல்வேந்திரன் ஆகியோர் மூலம் வசூல் வேட்டை நடைபெறுகிறது இது செயல் அலுவலர் (EO ) தெரிந்து நடக்கிறது என நான் நம்பு கிறேன் செயல் அலுவலர் இதை கண்டு கொள்ளாமல் தூங்குகிறாரா என தெரியவில்லை.

இந்த பதிவு ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மக்களின் நன்மைக்கு மட்டுமே இதில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது
இப்படிக்கு ஊர் மக்களில் ஒருவருவர்

இந்தியா 7 செய்தியாளர் தேனி செய்தியாளர் அஜ்மல்கான்