சாலையில் சறுக்கி விழுந்து காயமுற்ற இளைஞருக்கு முதல் உதவி செய்த ஆய்வாளர்

0
12

சாலையில் சறுக்கி விழுந்து காயமுற்ற இளைஞருக்கு முதல் உதவி செய்த காவல் உதவி ஆய்வாளர்

அரியலூர் மாவட்டம் கலெக்டர் ரவுண்டானா பகுதி வழியே வாகனத்தில் சென்ற வாலிபர் அங்கு சிதறி இருந்த ஜல்லி கற்களில் சறுக்கி கீழே விழுந்து காயங்களுடன் மயக்கமுற்றார். அப்பொழுது அந்த வழியாக வந்த அரியலூர் நகர உதவி ஆய்வாளர் உதயகுமார் அவர்கள் அந்த இளைஞரின் முகத்தில் தண்ணீர் தெளித்து இளைஞர்க்கு முதல் உதவி செய்து அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லிகற்களால் மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க சாலையோரம் இருந்த ஜல்லிகற்களை அப்புறப்படுத்தினார். இதை கண்ட பொது மக்கள் காவல் உதவி ஆய்வாளர் அவர்களை பாராட்டினர்.