விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் டெங்கு காய்ச்சல் பரவும் அறிகுறி மக்கள் அச்சம்

0
30

காரியாபட்டியில் டெங்கு காய்ச்சல் பரவ அறிகுறி. மக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி 6 வது வார்டு 3வது தெருவில் வசிக்கும் 29 வயது உள்ள செல்வகுமார் என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமணைக்கு சென்றுள்ளார். மருத்துவர் செல்வகுமாரை பரிசோதித்து பார்கையில் இவருக்கு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார். உடனே இரத்த பரிசோதனை எடுத்து பார்த்ததில் இவருக்கு டெங்கு காய்சல் வர அறிகுறி உள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். பின்பு இவர் எப்படி நமக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி வந்தது என மனமுடைந்து காணப்பட்டார். இவரது பக்கத்துவீட்டில் குடியிருக்கும் ஒரு சிலர் அப்பகுதியில் தொழுவம் வைத்து பசுமாடு வளர்த்து வருகின்றனர். தொழுவம் உள்ள பகுதியை தினமும் சுத்தம் செய்யாத காரணத்தால் தான் தமக்கு டெங்கு அறிகுறி வந்திருக்க கூடும் எனவும் இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என செல்வகுமார் கூறுகிறார். இதனை கருத்தில் கொண்டு காரியாபட்டி அனைத்து பகுதியிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் முத்துமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்…