மயிலாடுதுறையில் 3 குடிசை வீடுகள் தீக்கிரை, பூமி குழுமம் சார்பில் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

0
17

மயிலாடுதுறையில் 3 குடிசை வீடுகள் தீக்கிரை, பூமி குழுமம் சார்பில் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்:-

மயிலாடுதுறை, ஜூலை- 04; மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனுகீஸ்வரர் கோயில் குளத்தில் நேற்று தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது குப்பைகளை கூட்டி தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி புனுகீஸ்வரர் கோயில் கீழவீதியில் வசிக்கும் கலியபெருமாள் என்பவரின் குடிசை வீட்டில் பட்டு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, தீ அருகில் உள்ள சியாமளாதேவி, ராஜா ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது.

இதனால் இந்த 3 வீடுகளும் முற்றிலும் தீக்கிரையானது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். விபத்தில் உடமைகளை இழந்த குடும்பத்தினரை, மயிலாடுதுறை பூமி குழுமத்தின் நிறுவனர் ப.சிவசங்கரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பூமி குழுமத்தின் சார்பில் நிதியுதவி, துணிமணிகள், நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.