இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கைகளை உடனே ரத்து செய்ய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் அ .சங்கர் கோரிக்கை

0
17

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் சங்கங்கத்தின் பொறுப்பாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கைகளை உடனே ரத்து செய்ய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கை

தமிழகத்தில் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற கொடிய வைரஸ் தமிழகத்தில் ஆட்டிப்படைத்து பலியும், நோய்தொற்றும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்ந்ந சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கோடு பேச்சுரிமை எழுத்துரிமை பறிக்கும் வண்ணம் அவர்கள் தங்கள் கருத்தை தொலைக்காட்சி வாயிலாகவும் செய்தித்தாள் வாயிலாகவும் தெரிவித்த குற்றத்திற்காக சங்க நிர்வாகிகளுக்கு 17(பி) வழங்கிய பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் மிகவும் வருத்தமளிக்க கூடியதாகவும் கண்டனத்துக்கு உரியதாகவும் உள்ளது

உரிமைகளை பறிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கருதுகிறது

உண்மைக்கு புறம்பாக புனையப்பட்டுள்ள குறிப்பாணை 17 (B) யை ரத்து செய்யவேண்டும். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின்* மாநில நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவுகள் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் தொடர்பாக காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் கணக்கிடுவதில் உள்ள இடர்பாடுகள், குளறுபடிகள் மற்றும் மேற்படி தேர்வுகளில் மாற்று திறனாளிகள் நிலை, தனித் தேர்வர்கள் நிலை, மற்றும் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள போது மாணவர்களின் நிலை பற்றி அரசுக்கு, நமது தோழமை அமைப்பான தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் மா.ரவிச்சந்திரன் அறிக்கையாக வெளியிட்டார்.

இதைப்போல தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட்
அவர்கள்
மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் என்பது அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் வருகைப்பதிவையும் வைத்து தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு முறைகேடுகள் நடைபெற வழிவகுக்கும் என்றும் பல தனியார் பள்ளிகள் கல்வித்துறை நடத்தும் பருவத் தேர்வுகளை நடத்தாமல் அவர்களே கேள்வித் தாள் தயாரித்தோ அல்லது பிற பயிற்சி நிறுவனங்கள் தயாரிக்கும் வினாத்தாள்களை கொண்டோ நடத்துகிறார்கள் என்றும், ஒரு சில பள்ளிகள் இதை வியாபாரமாக்கி பணம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண்களை வழங்குகிறார்கள் என்றும் அப்போது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்ததை சுட்டிக்காட்டி இந்த சிக்கலை தவிர்க்க மதிப்பெண் பட்டியலுக்கு (MARK SHEET) பதிலாக அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்க இந்தாண்டு மட்டும் Grade system மட்டும் வழங்கி சம நீதியை நிலைநாட்டவும், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும் கல்வித்துறைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மண்ட் அவர்கள் ஆலோசனைகளை தன்னுடைய அறிக்கையினை
வெளியிட்டார்.

இதன் அடிப்படையில் நமது தோழமை அமைப்பான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் மற்றும் நமது தோழமை அமைப்பான தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் பேட்ரிக் ரெய்மெண்ட் போன்றோர் வெளியிட்ட காரணத்திற்காக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் அரசாணையை விமர்சனம் செய்தார் என குற்றம் சாட்டி 17 (B) குறிப்பாணையைநமது தோழமை அமைப்பின் பொறுப்பாளர்கள் மீது தொடர்ந்த உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை புனைந்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், மேலும், எமது தோழமை அமைப்பின் மாநிலத் தலைவர் மீதும் , பொதுச்செயலாளர் மீதும் உண்மைக்கு புறம்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறிப்பாணை 17 (B) யை ரத்து செய்ய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
இவண்
அ.சங்கர் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்
மாநில அமைப்பு