சிறுமிக்கு நேர்ந்த நிலையறிந்து தமிழகமே கலங்குகிறது

0
28

சிறுமிக்குநேர்ந்த நிலையறிந்து தமிழக மே கலங்குகிறது.

மஜகபொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் ஏம்பல் எனுமிடத்தில் ஜெயப்பிரியா என்ற 7 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி அறிந்து தமிழகமே பதறுகிறது.

அந்த ஏழை சிறுமியின் பெற்றோர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழும் காட்சிகள் அனைவரையும் கலங்க செய்கிறது.

நாகரீக சமூகத்தில் இது போன்று நடக்கும் கேடுகெட்ட நிகழ்வுகள் பண்பியல் வீழ்ச்சியை எடுத்துரைப்பதாக உள்ளது

இந்த பாதக செயலில் ஈடுபட்ட கயவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, உச்சபட்ச தண்டனையை வழங்க தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அக்குடும்பத்திற்கு ஆறுதல் நிதியாக 5 லட்சம் வழங்கியிருப்பதை வரவேற்கும் நிலையில், அக்குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை ஒன்றையும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.