நாகை மாவட்டம் நாகூர் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தை தாமதிக்க வேண்டாம்
சுற்றுலாத் துறை அமைச்சரிடம் மு.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை.

0
21

நாகை நாகூர் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தை தாமதிக்க வேண்டாம்

சுற்றுலாத் துறை அமைச்சரிடம் மு.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை

ஜூலை.03

நாகை தொகுதியில் உள்ள நாகப்பட்டினம் மற்றும் நாகூர் கடற்கரைகள் அழகுப்படுத்தப்பட்டு, சிறந்த பொழுதுபோக்கு இடங்களாக மாற்றப்படும் என மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கூறியிருந்தார்.

இது குறித்து மூன்று முறை சட்டமன்றத்தில் பேசியதோடு, சுற்றுலா துறை அமைச்சர் மாண்புமிகு திரு. வெள்ள மண்டி நடராஜனிடமும் நேரில் சந்தித்து பல முறை வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலிருந்தும் இதற்கான திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று அமைச்சர் திரு. வெள்ளமண்டி நடராஜன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்ட மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கி ஆவணம் செய்யுமாறும், இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் கூறினார்.

அடுத்த வாரம் சென்னை சென்றதும், சுற்றுலா ஆணையரிடம் பேசி துரித நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.