திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டேன்.
திருச்சி மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிப்பதற்கும், குற்ற நடவடிக்கையை தடுப்பதற்கும், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் சிறந்த முறையில் பணிபுரியவும், போக்குவரத்தை பராமரிப்பதற்கும், சாலை விபத்துக்களை தடுப்பதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் வைரஸ் தொற்று நோய் பரவுதல் காரணமாக இணையவழி மூலமாக (Online) புகார்களை அனுப்பி நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் மூலம் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் 96262-73399 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாக தாங்கள் எழுத்து மூலமான புகார்களை தெரிவித்தால் அதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு புகார் கொடுப்பவர்களுக்கு அவர்களது கைப்பேசிக்கே ஒப்புகை குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும். புகார்களின் தன்மைக்கு ஏற்ப காணொலி மூலம் புகார்களை தெரிவிக்க உரிய ID(உள்ளீடு) புகார்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும். மேற்கண்ட எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 1100 மணிமுதல் 1200 மணிவரை தங்கள் புகார்களை காணொளி மூலம் தெரிவிக்கலாம்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் திருச்சி மாநகர காவல் ஆளினர்கள் அனைவருக்கும் பொதுமக்களுடன் நல்லுணர்வு வலுக்கும் வகையில் தகுந்த முறையில் நடந்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே திருச்சி மாநகர காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த வைரஸ் தொற்று நோயை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக மேலே குறிப்பிட்ட வாட்ஸ்-அப் எண்ணிற்கோ அல்லது எனது தொலைப்பேசி எண்ணிற்கோ (98844-47581) நேரடியாக தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து காவல்துறைக்கு உதவ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.