சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தாலுக்கா அலுவலகம் மூடப்பட்டது

0
40

வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தாலுகா அலுவலகம் மூடப்பட்டது..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட சாக்கோட்டை கிராம வருவாய் ஆய்வாளருக்கு நேற்று மாலை கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைக்கப்பட்ட சிறப்பு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காரைக்குடி தாலுகா அலுவலகம் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சான்றிதழ்கள் பெற தாலுகா அலுவலகம் வந்த பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.