திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி எல் சாலையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

0
8

வாணியம்பாடி சி.எல்.சாலையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து. ரூ.1 லட்சம் பதிப்பிளான பொருட்கள் சேதம்.

வாணியம்பாடி ஜூலை 01 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சீ.எல் சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் ஆனந்தவேல். இன்று மதியம் 2 மணி அளவில் ஊரடங்கு காரணமாக கடையை அடைத்து விட்டு வீடிற்க்கு சென்ற விட்டார். இந்நிலையில் மாலை 7 மணிக்கு திடீரென கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கடையில் இருந்து புகை வருவதை அக்கம் பக்கத்தினர் சென்ற பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ வித்தால் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.

தீ விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.