தூத்துக்குடி மாவட்டம் நியாயவிலை கடைகளுக்கு வேலைவாய்ப்பு

0
18

தூத்துக்குடி மாவட்ட நியாயவிலைக் கடைகளில் வேலை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 

1.பணி: நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள்

காலியிடங்கள்: 52

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி

2.பணி: நியாயவிலைக்கடை கட்டுநர்கள்

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க  வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

விற்பனையாளர் – ரூ.150

கட்டுநர் – ரூ.100

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை கூட்டுறவு விற்பனை சங்க  அலுவலகங்களில் வேலை நாட்களில் வேலை நேரத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தகுதியானவர்கள் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க  வேண்டிய கடைசி நாள்: 25.07.2020