மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி கடை வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது

0
32

தரங்கம்பாடி அருகே ஆயப்பாடி கடை வீதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.

தரங்கம்பாடி, ஜூலை -01;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆயப்பாடி கடைவீதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
இதில், இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணை செயலாளர் ஆயப்பாடி முஜிபுர் ரகுமான் தலைமையில்,
நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில், பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் வழங்கி துவக்கிவைத்து கொரோனா நோய் தொற்று மற்றும் சமூக விழிப்புணர்வு பற்றிய தகவல்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து பேசினார்.

மேலும், ஜூன் 30 மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேர் உயிர் தியாகம் செய்த வீரவணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்வலவன், விசிக செம்பை ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,
செம்பை ஒன்றிய திமுக பொறுப்பாளர் அப்துல்மாலிக், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், முஸ்லிம் லீக் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நூறுல்லாஹ், சிறுத்தை ஆயப்பாடி அமீன், சங்கை நவீத், சங்கை சதக்கத்துல்லா, ரியாஸ், வதீஸ்டாசேரி ஆரிப்பாய் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.