தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் முகக் கவசம் சமூக இடைவெளி கடை பிடித்தல் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

0
12

தூத்துக்குடி மாவட்டம்
குலசை கிளை சமூகநீதி மாணவர் இயக்கத்தின் சார்பாக 30.06.2020 இன்று காலை வேலையில் 1500 நபருக்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு கொரானா வைரஸ்க்கு எதிர்வினை ஆற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்தான கபசுர குடிநீர் கஷாயம் வழங்கப்பட்டது.

குலசை கிளை தலைவர் முகமது தௌபிக் தலைமையில் வழங்கப்பட்டது .சிறப்பு அழைப்பாளராக குலசேகரப்பட்டினம் பஞ்சாயத்து துணை தலைவர் கணேசன், காவல் துறை துணை ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கசாயம் வழங்கினார்கள். மமக குலசை கிளை செயளாலர் M. ஹஜ்ஜி முஹைதீன், தமுமுக கிளை செயலாளர் நூர் முஹம்மது, குலசை கிளை தமுமுக துணை செயலாளர் அம்ஜத் மீரான், குலசை கிளை சமூகநீதி மாணவர் இயக்க செயளாலர் இப்ராஹீம்,குலசை கிளை மமக இளைஞரணி செயலாளர் சிராசுதீன், குலசை கிளை மமக இளைஞரணி பொருளாளர் அரபாத்,மாலிக் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் உறுப்பினர்கள் ரோசன், அர்சத், சாகுல், ஹனிபா, ரஜபுதீன், சராபத்துல்லாஹ், அல்தாப், அஜ்மூதின், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.