தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உடன்குடி சிறப்புக்கள்

0
50

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பனைத்தொழில் சிறந்து விளங்கும் உடன்குடி, கருப்பட்டி மற்றும் வெற்றிலைக்கு சிறப்பு வாய்ந்தது.

உடன்குடிக்கு அருகில் அமைந்த ஊர்கள்;கிழக்கே குலசேகரபட்டினம் 5 கிமீ, மேற்கே சாத்தான்குளம் 21 கிமீ, வடக்கே திருச்செந்தூர் 15 கிமீ, தெற்கே உவரி 24 கிமீ.,

உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.’உடை’என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. ‘குடி’ என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து ‘உடன்குடி’ என்றானது. இங்கு இந்து,முஸ்லிம்,கிருத்துவ மக்கள் சம எண்ணிக்கையிலும் ஒற்றுமையுடனும் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.

ஊரில் பதினாறு முஸ்லிம் தெருக்கள் உள்ளன பதினாறு பள்ளிவாசலும் உள்ளது, தெருவின் இருபுறமும் வீடுகளும் தெருவின் ஒரு முனையில் நடுவில் பள்ளிவாசல் அமைந்திருக்கும். தமிழகத்தில் எந்த ஊரிலும் இத்தனை தெருக்களில் இப்படி அமைப்பு கிடையாது . பெரும்பாலான பள்ளிகள் கல்லுப் பள்ளிகள், எங்க தெருப் பள்ளி 900வருட பழமையானது, எல்லாப் பள்ளிகளும் உட்பள்ளி, வெளிப்பள்ளி என்கிற அமைப்போடு இருக்கும்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இருந்தனர் இப்பொது பிழைப்பிற்காக வெளியூர் சென்றதால் குறைந்து விட்டனர் வீடுகள் மட்டும் அப்படியே உள்ளது.

முஸ்லிம்களுக்கு 70′ வரை பெரும்பானவர்களுக்கு தொழில், வேலை கொழும்பு தான், நல்ல வசதியாகவும், செழிப்பாகவும் வாழ்ந்தனர். முஸ்லிம்கள் பேச்சு வழக்குகூட கொழும்பு வாசம் கலந்து தான் இருக்கும். இப்போது கொழும்பு தொடர்பு சுத்தமாக இல்லை. எங்கள் அப்பா (தாத்தா) தலைமுறையோடு முடிந்து விட்டது.
தற்போது சென்னை,மற்றைய ஊர்கள் , வெளிநாடு என்று பிழைப்பு தேடி செல்கின்றனர்.

ஒவ்வொரு வீடும் மடம் மாதிரி இருக்கும். எல்லா வீடுகளும் தெருத் திண்ணைகளோடு தான் இருக்கும். சில வீட்டுத் திண்ணைகள் ஒரு குடும்பம் நடத்தும் அளவுக்கு பெரியாதாக இருக்கும். முந்தைய காலத்தில் அந்தளவு பரந்து விரிந்து அவர்களின் மனதும் இருந்து , பெரிய கொடை வள்ளலாகவும் வாழ்ந்தனர் , எங்க ஊர் பஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, சில வணிக வளாகங்கள், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள் முஸ்லிம்கள் வழங்கியவை.
எங்க ஊர் பேருந்து நிலையத்திற்கு அதை வழங்கியவரின் பெயரான ‘ஏ,எஸ்,எம், முஹமது அபூபக்கர் பேருந்து நிலையம்’ என்றே பெயர் சூட்டப்பட்டள்ளது.

ஊரிலும் , அருகாமை ஊர், மாவட்டங்களில் தேரி காடு என்று சொல்லப் படும் வளம் நிறைந்த செம்மண் பகுதிகள் நிறைந்துள்ளன.