திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் அழைத்து வந்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

0
29

வாணியம்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனை  செய்துகொள்ளுமாறு வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் அழைத்து வந்து  பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தற்போது வரை 154 பேருக்கு மேல் கொரோனா வைரஸ்  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது இதில் 108 பேர் கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகின்றனர் நோய் தொற்று ஏற்பட்டு 46 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது வரை 17263 பேருக்கு நோய்தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது பரிசோதனை முடிவுக்காக 1026 பேர் காத்திருக்கின்றனர் வீடுகளில்  1077 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 52 பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது மாவட்டம் முழுவதும் 12 தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மையங்கள் உள்ளது இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை 4-ஆவது வார்டு பகுதியில் 25 பேருக்கும் மேலாக ஒரே வார்டு பகுதியில் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்களை வீட்டிலேயே வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது இந்நிலையில் நாள்தோறும் அப்பகுதியில் 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதியில் மட்டும் 35% பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் வட்டார மருத்துவஅலுவலர், வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர்(DEO) ஆம்பூர் பட்டாலியன் காவலர், ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் என தற்போதுவரை 154 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது