விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா
மக்கள் அச்சம்.

0
13

திருச்சுழி தாலுகாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…
மக்கள் அச்சம்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அவருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவரை மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதனால் நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தூய்மை பணியாளர்கள் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் மருத்துவமனை வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.