காவல் துறை தாக்கு தலுக்கு உள்ளாகி சிறு நீரக பாதிப்பு அடைந்த காயல்பட்டினம் இளைஞரை மஜக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்

0
13

காவல் துறை தாக்கு தலுக்கு உள்ளாகி சிறுநீர கபாதிப்பு அடைந்த காயல்பட்டினம் இளைஞரை மஜக நிர்வாகிகள் சந்தித்துஆறுதல்

ஜூன்.28,
காயல்பட்டினத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹபீப் முகமது கொரோனா காரணமாக தடைச் செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த 9 ஆம் தேதி ஆறுமுகநேரி காவல்துறையினரால் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பணியில் இருந்த காவலர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்து டயாலிசிஸ் செய்து வருகிறார்.

மஜக வின் துணைப் பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மஜக வின் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் இன்று அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது சமூக ஆர்வலர் வழக்கறிஞர் M.N.அஹமது ஸாஹிப் அவர்களும் உடனிருந்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்கள் எடுக்கும் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மஜக துணை நிற்கும் என்று பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப் , காயல் நகர நிர்வாகிகள் ஜிப்ரி, மீரான், சிக்கந்தர் பாட்சா ஆகியோரும் உடனிருந்தனர்.