ஐல்லிக்கற்களால் டூ வீலர் விபத்து
கர்ப்பிணி பெண் கர்ப்பம் கலைந்தது.

0
20

ஐல்லிக்கற்களால் டூ வீலர் விபத்து
கர்ப்பிணி பெண் கர்ப்பம் கலைந்தது.

தேனி அரண்மனைபுதூரில் முல்லை நகரில், 3 மாதங்களாக தார்ரோடு அமைக்காமல் ஜல்லிக்கற்கள் பரவிவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு சென்று வழுவதில் சிரமடைகின்றனர்.

முல்லைநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள அரசு குடியிருப்புகளில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர்.

கடந்த 3 மாதத்திற்கு முன், முல்லை நகர் மெயின் சாலை மற்றும் தெருக்களில் பழைய சாலையை தோண்டி வேலை பார்ப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல்வேறு இடங்களில் பரவிவிடப்பட்டது.

இதனால் அந்த ரோட்டில் செல்லும் பொதுமக்கள் வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டது. இதனால், இதுவரை 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் ஒரு தம்பதியினருக்கு 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் போது டூவீலர் நிலைதடுமாறி கீழே விழுந்து கர்ப்பம் கலைந்தது.

இதனால் தம்பதியினர், உறவினர்கள் வார்த்தைகளால் கூற இயலாத துயரம் அடைந்தனர்.

இதுகுறித்து, முல்லை நகர் பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர், அரண்மனைப்புதூர் ஊராட்சித் தலைவர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர் ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.

வாகன போக்குவரத்து இல்லாததால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும் மருத்துவ தேவைக்காகவும் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆட்டோவில் போகமுடியாமல் முதியவர்கள் ,கர்ப்பிணிப் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவித்தனர் தார்ரோட்டை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.