விளாத்திகுளம் அருகே போலீஸ்சார் அடித்ததால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை

0
46

விளாத்திகுளம் அருகே போலீஸ்சார் அடித்ததால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை – காவல்துறை பணம் மற்றும் அரசு வேலை தருவதாக கூறி மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் மேலத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கணேசமூர்த்தி (29) கட்டித்தொழிலாளியான இவர் கடந்த சனிக்கிழமை மாலை மதுபோதையில் பைக்கில் சென்றபோது தவறிவிழுந்துள்ளார். அப்போது அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கணேசமூர்த்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது மகனின் பள்ளி நோட்டில் தனது மரணத்திற்கு உளவுத்துறை அதிகாரி கார்த்தி தான் காரணம் என்று எழுதிவைத்து உள்ளார். அவரது உடல் எட்டயபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் நிலவி வருவதால் எட்டயபுரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் மேலத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கணேசமூர்த்தி (29) கட்டித்தொழிலாளியான இவர் கடந்த சனிக்கிழமை மாலை பைக்கில் சென்ற போது தவறிவிழுந்துள்ளார். இவர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த எட்டயபுரம் காவல் நிலைய உளவுத்துறை காவலர் கார்த்திக், கணேசமூர்த்தியை சத்தம் போட்டது மட்டுமன்றி, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து வந்த 4 போலீசார் கணேசமூர்த்தியை அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். மேலும் கணேசமூர்த்தி வந்த பைக்கினை பிடிக்கி கொண்டு அவரது வீட்டு வரை அடுத்தவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கணேசமூர்த்தியை அவரது தாய் தனலட்சுமி எட்டபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர் இல்லாததால் அங்குள்ள செவிலியர்கள் அவருக்கு முதலுதவி செய்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து கடந்த சில தினங்களாக அவரது தாய் மற்றும் மனைவி ராமலட்சுமியிடம் , உளவுத்துறை காவலர் கார்த்திக் தூண்டுதலின் பேரில் காரணமில்லாமல் 4போலீசார் என்னை அடித்ததற்கு நியாயம் கிடைக்கவேண்டும். இல்லையேல் நான் இறந்து விடுவேன் எனக்கூறியுள்ளார். அவரது தாய் மற்றும் மனைவி இருவரும் கணேசமூர்த்தி சமாதானப்படுத்தினர். ஆனால் கணேசமூர்த்தியை சமாதானம் அடையாமல் ஊர் பெரியவர்கள் சிலரிடம் சந்தித்து தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். அவர்களும் இவருக்கு உதவிக்கு வரவில்லை என்பதால் மனமுடைந்த கணேசமூர்த்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகன் படிக்கும் நோட்டில் உளவுத்துறை காவலர் கார்த்தி தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது கூறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். இந்நிலையில் கணேசமூர்த்தி தற்கொலைக்கு காரணம் உளவுத்துறை காவலர் கார்த்திக் தான் காரணம் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று அவரது தாய் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எந்த தவறு செய்யாத தனது மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். பைக்கில் வால் படம் ஒன்று இருந்ததாகவும், அதனை பார்த்து தான் உளவுத்துறை காவலர் கோபம் அடைந்த அந்த படத்தினை அழித்து மட்டுமின்றி, தனது மகனை தாக்கியுள்ளதாக, மனவேதனையில் தான் மகன் உயிர் இழந்ததுள்ளார். தங்கள் மகன் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார் அவரது தாய் தனலெட்சுமி

தன்னுடைய கணவனை கடுமையாக தாக்கியது மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு கூட அனுமதிக்கவில்லை, தற்பொழுது அவர் இறந்த பிறகு பணம் மற்றும் வேலை தருவதாக போலீசார் கூறுவதாகவும், தனக்கு எதுவும் வேண்டாம் தனது கணவன் இறப்பு நியாயம் தான் வேண்டும் என்று கூறியுள்ளார் அவரது மனைவி ராமலெட்சுமி

இதனால் எட்டயபுரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பேட்டி :
1.தனலெட்சுமி – கணேசமூர்த்தி – தாய்
2.ராமலெட்சுமி- கணேசமூர்த்தி – மனைவி