மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சவுடு மண் குவாரியை மூடக்கோரி குழியில் தேங்கியுள்ள நீரில் இறங்கியும் லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்

0
29

சீர்காழி அருகே சவுடு மண் குவாரியை மூட கோரி குழியில் தேங்கியுள்ள நீரில் இறங்கியும், லாரிகளை சிறைபிடித்தும் கிராமமக்கள் போராட்டம்

சீர்காழி, ஜுன்-27;
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வழுதலைக்குடியில் சவுடுமண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், சவுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் பழுதடைவதால் குவாரியை மூட வலியுறுத்தி குவாரியில் சவுடு மண் ஏற்றிய 20-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தனி மனித இடை வெளியை பின்பற்றி குவாரியில் மண் எடுத்த குழியில் தேங்கியுள்ள தண்ணீரில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகளவு ஆழமாக மண் எடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.