தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் மனிதநேய மக்கள் கட்சி நீதிக்கான போராட்டம் சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை கண்டித்து இணையவழி தள போராட்டம்,

0
11

மனிதநேய மக்கள் கட்சி நீதிக்கான போராட்டம் சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை கண்டித்து இணையவழி தள போராட்டம், இடம் உடன்குடி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலைக்கு காரணமான காவல் துறையினரை பணிநீக்கம் செய்து கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தியும் பொய் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், குற்றசாட்டுப்பட்டவரின் நிலையை அறிந்து சிறைக்கு அனுப்பிய நீதிதுறைநடுவர் ஆகியோரையும் பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமுமுக, மற்றும் மமக, மாவட்ட தலைவர் :s.ஆசாத், ம ம க மாநில துணை பொது செயலாளர் : ஜோசப் நொலாஸ்கோ, மமக மாவட்ட துணை செயலாளர் : ரபிக், மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் : பரக்கத்துல்லாஹ், உடன்குடி நகர தலைவர்: ஷேக், தூத்துக்கு மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் : T.ஆபித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் : ஜோதி, சுற்றுசூழல் அணிநகர செயலாளர் ஆட்டோ கலீல், தொண்டரணி செயலாளர்: இத்ரீஸ், உடன்குடி நகர நிர்வாகிகள்: ஜபருல்லாஹ், ம.ம.க செயலாளர்: MKS. ஹமீது, உடன்குடி ஒன்றிய பொருளாளர்: S.முஹம்மது ஹாலித், உடன்குடி நகர த.மு.மு.க செயலாளர் :A. K. இப்ராஹிம், மற்றும் நிர்வாகிகள் நீதிக்கான போராட்டத்தில் சமூக இடைவெளியோடு முக கவசம் அணிந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.