சாத்தான்குளம் சம்பவம்: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், சிங்கப்பெருமாள் கோயில் வியாபாரிகள் சங்கத்தினர் கருப்பு நிற கொடி ஏந்தி நூதன போராட்டம்.

0
21

சாத்தான்குளம் சம்பவம்: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், சிங்கப்பெருமாள் கோயில் வியாபாரிகள் சங்கத்தினர் கருப்பு நிற கொடி ஏந்தி நூதன போராட்டம்

சாத்தான்குளம் வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைபு,மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் வணிகர்கள் சார்பில் சார்பில் சிங்கப்பெருமாள் கோயிலில் கருப்பு நிற கொயியை கையில் பிடித்தவாறும், மெழுகுவர்த்தியை ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த பென்னீக்ஸ், அப்பகுதி பேருந்து நிலையம் அருகே, செல்போன் விற்பனைக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 19 ம் தேதியன்று கடைகளை குறித்த நேரத்தில் அடைப்பது தொடர்பாக காவல் துறையினர் சிலருக்கும், பென்னீக்ஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

இதனையடுத்து, பென்னீக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இது பற்றி விளக்கம் கேட்ட பென்னிக்சின்  தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து கடந்த 21ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் கிளைச்சிறையில் கைதிகளாக இருந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

பின்னர், சிறையில் மரணம் அடைந்த இருவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில், இருவரின் மணரத்திற்கு நீதி கேட்டு, செங்கல்பட்டு மாவட் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தப்படு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மணல் லாரி உரிமையளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, மற்றும் வணிகர்கள் சார்பில் சார்பில் கருப்பு நிற கொடியை கையில் ஏந்தியும் மெழுகுவர்த்தியை ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைபு மாநில செய்தி தொடர்பாளர் கணேஷ் கூறுகையில்:-

வணிகர்கள் தாக்கபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையளிக்கிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கூறினார்.