விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா.

0
63

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியம் நாயனேந்தல் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் வயது (25) த/பெ மணி என்பவர் வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்றவர் 15/06/2020 அன்று சொந்த ஊரான நாயனேந்தல் திரும்பியுள்ளார். 25/06/2020 அன்று நரிக்குடியில் வைத்து பரிசோதனை செய்ததில் மேற்படி நபருக்கு நேற்று நள்ளிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மணி(தந்தை) வயது (55) சுபா (தாய்) வயது (45) நிவேதா (சகோதரி) வயது (22) மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அக்கம் பக்கத்தினரை மருத்துவ குழுவினர் விசாரித்து வருகின்றனர்…

செய்திகளுக்காக
மகேஸ்வரன்
விருதுநகர் மாவட்ட செய்தியாளர்