பொதுவான செய்திகள்

தூத்துக்குடி காவல்துறையை கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி 25.6.2020
தூத்துக்குடி செல்போன் உரிமையாளர்கள் இருவரை தூத்துக்குடி காவல்துறை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கேஜி.ரகுராமன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி. வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணியன், எஸ்.சாமிநாதன், எம்.பி.கே. பாண்டியன், மாணவர் சங்க பொறுப்பாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நகர குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். இதேபோன்று வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகானந்தம் கண்டன உரை நிகழ்த்தினர்.

Related Articles

Back to top button