ஆகஸ்டு மாதம் சசிகலா விடுதலையாகிறார்? | பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

0
26

சசிகலா நன்னடத்தை விதிகளின் படி விடுதலை செய்யப்படுவார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் இன்று வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிறையில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  சசிகலா வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தபோது அந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் சேர்த்தே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு அந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் 2015-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி அனைவரையும் விடுதலை செய்தது.அதன் பின் டிசம்பர் 5-ம் தேதி 2016-ம் ஆண்டு நடந்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப்  பிறகு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி மீண்டும் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது என்றும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது எனவும் அறிவித்தது. இதனையடுத்து சசிகலா மற்றும் மற்ற இரண்டு குற்றவாளிகளும் மீண்டும் சிறை சென்றனர்.

https://twitter.com/AseerAchary/status/1276156935222501384

சசிகலா சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சூழலில் அவர் தண்டனை காலம் முடியும் முன்பே நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் பாஜகவின் நூலகம் மற்றும் ஆவணப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆசீர் ஆச்சாரி தன் ட்விட்டர் பக்கத்தில் “திருமதி சசிகலா நடராஜன் பெங்களூர் பார்ப்பன அக்ராஹார மத்திய சிறையிலிருந்து 14 ஆகஸ்ட் 2020 அன்று வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளது.மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள்.” என தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது