பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு தொடர்ந்து 3-வது நாளாக மஹாயோகம் சார்பில் கபவாத சூப் இளைஞர் மன்றத்தில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

0
12

பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு தொடர்ந்து 3-வது நாளாக மஹாயோகம் சார்பில் கபவாத சூப் இளைஞர் மன்றத்தில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது

விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவியூர் செக்போஸ்டில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறை,வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சி துறை, சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும்,
காரியாபட்டியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மதுரை மகாயோகம், காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் கபவாத சூப் தொடர்ந்து 3-வது நாளாக 100- க்கும் மேற்பட்டவர்களுக்கு வழக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.
இதில் மகாயோகம் பயிற்சியாளர்,சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.செந்தில்குமார், காரியாபட்டி அன்னைதெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் அருண்குமார், துணைத்தலைவர் செந்தில்குமார், நிர்வாக குழு உறுப்பினர் மணிகண்டன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகேஸ்வரன்
விருதுநகர் மாவட்ட செய்தியாளர்