திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

0
17

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் தெற்கு வட்டாரா போக்குவரத்து அலுவலகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்டரமணி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு முன்னாள் ஓமியோபதி துறை ஆலோசகர் டாக்டர் கே. கிங் பேசுகையில் கொரோனா சமுதாய தொற்றாக மாறாமல் நாம் ஒவொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வேலைக்கு வெளியே வரும் நாம் அஜாக்கிரதையால், வீட்டில் உள்ள குழந்தைகளும், முதியவர்களும் பாதிக்கப்பட்டு விடுவார்கள். ஒவொருவரும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மத்திய மாநில அரசுகள், மருத்துவர்கள், ஊடகங்கள், செய்தித்தாள்கள் தினம் தினம் பல எச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கினாலும், பொதுமக்கள் பலரும் நோயின் அபாயத்தை உணராமல் அஜாக்கிரதையாக இருப்பது வேதனை தருவதோடு, கவலையையும் தருகிறது. மத்திய மாநில அரசுகள் சொல்லும் ஆலோசனைகளை வழிகாட்டுதலை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார். எந்த நோய் குறிகளுமே இல்லாமல் நோய் தாக்கத்தில் பலரும் நம்மிடையே நடமாடுவதை உணர்ந்து எல்லோரும் மிக, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டியதின் அவசியத்தையும், இடைவெளி பற்றியும் எடுத்து கூறி ஓமியோபதி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் 30சி மாத்திரைகளை உட்கொள்ளுவதால் கொரோனா வைரஸிற்கு எதிர்ப்பு சக்தி உடலில் கோடி எனத் தெரிவித்தார். ஆர்செனிகம் ஆல்பம் 30சி தினம் காலை வெறும் வயிற்றில் 4 மாத்திரைகள் வீதம் 3 நாட்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்து உட்கொள்ளலாம். மாத்திரைகளை கையில் தொட வேண்டாம். மாத்திரை சாப்பிடும் 3 நாட்களுக்கு காபி குடிக்க வேண்டமென்று ஆலோசனை வழங்கி அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் ஆர்செனிகம் ஆல்பம் 30சி இலவசமாக வழங்கினார்.
இறுதியாக மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா, இலவசமாக கொரோனாவிற்கு எதிரான ஓமியோயோபதி தடுப்பு மருந்தை திருப்பூர் மக்களுக்கு இலவசமாக வழங்கி வரும் டாக்டர் கிங்கின்சேவையை பாராட்டி நன்றி கூறினார்.