வினோத விழிப்புணர்வு: பல்லடம் அருகே சாலையோர பேக்கரியில் கோவிட் – 19 பாதுகாப்பு்

0
28

வினோத விழிப்புணர்வு: பல்லடம் அருகே சாலையோர பேக்கரியில் கோவிட் – 19 பாதுகாப்பு்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் அமைந்துள்ள கீதா பேக்கரியில் கொரோனா பாதுகாப்பு உடையில் பணியாளரை நிறுத்தி வைத்து முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு இலவச மாஸ்க் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை கண்ட கடையின் உள்ளுர், வெளியூர் வாடிக்கையாளர்கள் அக்கடையின் உரிமையாளர் ஈஸ்வரன் என்பவரையும், கடையின் பணியாளர்களையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி முகக் கவசம் வழங்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இவ்வழியே வெளியூர் செல்லும் மக்களுக்கும் தடுப்பு நடவடிக்கைக்காக தன்னால் முடிந்த உதவிகளை பேக்கரி ஊளியர்களும், உரிமையாளரும் ஒன்றிணைந்து செய்து வருவதை நாமும் வாடிக்கையாளர்களுடன் இணைத்து வாழ்த்தி பாராட்டுவோம்…