வீராணம் ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் வந்தது அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மலர் தூவி வரவேற்றனர்
காட்டுமன்னார்கோயில்

0
56

வீராணம் ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் வந்தது அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மலர் தூவி வரவேற்றனர்

காட்டுமன்னார்கோயில் ஜூன் 24

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரிஅமைந்து உள்ளது இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும் இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தைத் தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது எனவே கடந்த 12ம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது மேட்டூர் அணையில் தண்ணீர் கடந்த 16ஆம் தேதி கல்லணையை வந்தடைந்தது இந்த நிலையில் அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது அந்த தண்ணீர் இன்று அனக்கரை கீழணையில் சென்றடைந்தது வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் வரத்து உள்ள நிலையில் கீழணையில் இருந்து முழுவதுமாக வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது இதனால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இன்று காலை வடவாறு வழியாக 81 கன அடி நீர் வந்தது அதனை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தேமுதிக காட்டுமன்னார்கோயில் ஒன்றிய செயலாளர் அந்தோணி ஜோசப் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பொன்னம்பலம் கே பி குமார் ஆகியோர் வீராணம் நல்லூர் பாலம் அருகில் மலர் தூவி வரவேற்றனர் மேலும் நீர்மட்டம் தற்போது 40.34 அடியாக உள்ளது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக 49 கண அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் மேட்டூர் அணை தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி மட்டம் உயர்ந்து வருகிறது எனவே சென்னை குடிநீருக்காக கூடுதலாக குடிநீர் அனுப்பப்படும் என்று கூறினார்

செய்திகள் கடலூர் மாவட்ட செய்தியாளர்
கே பாலமுருகன்