திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடைக்காரர்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவுரை

0
22

சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள் பணியாளர்களின் மீது வழக்கு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கடை கடையாக சென்று கடையில் பணிபுரியும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து உள்ளனரா கிருமி நாசினி யை பயன்படுத்துகின்றனர் என சோதனையிட்டனர் அப்படி முறையாக முக கவசம் அணியாத தரமான கிருமிநாசினி பயன்படுத்தாத கடையில் உள்ள பணியாளர்கள் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர் அதேபோன்று கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் சமூக இடைவெளியின் அவசியத்தை எடுத்துரைத்தனர் இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்தவர்களையும் எச்சரித்து அனுப்பினர்