தந்தை, மகன் உயிரிழப்பு -டிஜிபி ஆஜராக உத்தரவு
கோவில்பட்டி சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆஜராக

தந்தை, மகன் உயிரிழப்பு -டிஜிபி ஆஜராக உத்தரவு

Advertisement

கோவில்பட்டி சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.

சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 2 எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

மேலும், நாளை தமிழகம் முழுவதும் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறைத்துறை ஏடிஜிபி சம்பவம் தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அதில் வழக்கினை மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்து தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி காணொளி காட்சி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.    

Show More
Back to top button