திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செல்போன் கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம்

0
32

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செல்போன் கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்னால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவரும் ஜெயராஜ் பென்னிக்ஸ் மற்றும் உள்ளிட்ட இருவரும் நீண்ட நேரம் கடை திறந்து வைத்திருந்ததாகவும் அரசு விதிமுறைகளை மீறியதாக குரானா வைரஸ் தொற்றுக்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டி அவர்களை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து அவர்களை தாக்கி சிகிச்சை அளிக்காமல் சிறையிலடைத்த தாக கூறப்படுகிறது இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு தந்தை மகன் இருவரும் உயிரிழந்ததாகவும் இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு உதவி ஆய்வாளர்களை தற்காலிக பணிநீக்கம் மற்றும் அனைத்து காவல் துறை சார்ந்தவர்களையும் அந்த காவல் நிலையத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார் ஆனால் பொதுமக்கள் மற்றும் உயிரிழந்த இருவரின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் இந்த சம்பவம் தமிழகமெங்கும் தீ போல் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து புதிய பேருந்து நிலையம் அருகில் இறந்த இருவருக்காக மௌன அஞ்சலி செலுத்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர் செல்வகுமார் செல்போன் கடை உரிமையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அரசு உரிய இழப்பீடு அவர்களுக்கு வழங்க வேண்டும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்