22 வயது… 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மரணம் – திருப்பூரில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

0
199

திருப்பூரில் கொரொனாவிற்கு முதல் பலி

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக (டெக்னிஷியனாக) வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவரை கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஒரு வார காலமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினருக்கு மன அமைதியை தர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்