மயிலாடுதுறை “அன்பு அறக்கட்டளை” சார்பில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்ட குழைந்தைகள் காப்பகத்திற்கு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

0
15

மயிலாடுதுறை “அன்பு அறக்கட்டளை” சார்பில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்ட குழைந்தைகள் காப்பகத்திற்கு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கல்

சென்னை கொளத்தூர் அருகே எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை மயிலாடுதுறை “அன்பு அறக்கட்டளை”யின் நிறுவனரும் அதன் தலைவருமான கொ.அன்புகுமார் வழங்கினார்.

அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோளை ஏற்று சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு விரைந்த அன்பு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கொ.அன்புகுமார், உடனடியாக அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்தார். மேலும் அங்கு தங்கி படிக்கும் மாணவ மாணவியரிடம் உரையாடிய அவர், அவர்களது மேற்படிப்புக்கான உதவியையும் செய்து தருவதாக தெரிவித்திருக்கிறார். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் மனதில் அன்பை விதைக்கும் அன்பு அறக்கட்டளை இந்த இக்கட்டான ஊரடங்கு காலத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிட தக்கது.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.