தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஊரடங்கு தேவையில்லை, அவசியம் ஏற்படவில்லை – மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி பேட்டி
சமுத்திர சேது ஆபரேசன் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.
தமிழகத்தை சேர்ந்த 195 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உட்பட 198 பேர் வந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் தெர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதனை தொடர்ந்து குடியுரிமை சோதனைக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேட்டி.

0
26

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஊரடங்கு தேவையில்லை, அவசியம் ஏற்படவில்லை – மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரி பேட்டி

சமுத்திர சேது ஆபரேசன் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

தமிழகத்தை சேர்ந்த 195 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உட்பட 198 பேர் வந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் தெர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதனை தொடர்ந்து குடியுரிமை சோதனைக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார், ‘’வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பொருட்டு மத்திய அரசின் சமுத்திரக் சேது திட்டத்தின் கீழ் மூன்றாவது கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது.
ஏற்கனவே ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலமாக இரண்டு முறை பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று வந்த ஐஎன்எஸ் ஐராவத் கப்பலில் நெல்லை,தூத்துக்குடி,விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 25 நபர்கள் உள்பட மொத்தம் 200 பேர் வந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 64 பேர் உள்ளனர். நமது மாவட்டத்திற்கு அடுத்த கட்டமாக ஜூன் 28ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து 700 இந்தியர்களை தூத்துக்குடி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வெளியிலிருந்து வந்தவர்கள், எதாவது நிகழ்ச்சி மூலம்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை.
முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். தொற்று உறுதி என கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனவே இப்போதைக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஊரடங்கு தேவையில்லை. அதற்கான அவசியங்கள் மாவட்டத்தில் ஏற்படவில்லை’’ என்றார்.