ஆங்கில மருத்துவத்தின் வணிக நோக்கம் சித்த மருத்துவத்தைப் பாதிக்கிறதா – உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி.

0
28

ஆங்கில மருத்துவத்தின் வணிக நோக்கம் சித்த மருத்துவத்தைப் பாதிக்கிறதா – உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி

உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்த, வராமல் தடுக்க, சித்த மருத்துவத்தில் கூறியுள்ளபடி 66 மூலிகைக்களைக் கொண்டு IMPRO என்ற சித்த மருத்துவ மூலிகை பொடி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை புதுதில்லியில் உள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, உறுதிபடுத்தி கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்தும் என்று சான்று வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின்போது, கொரோனா வைரஸ் தொற்றால் நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரு அரசு சித்த மருத்துவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். அதை சோதனை செய்து உறுதிப்படுத்துங்கள் என கடந்த மார்ச் மாதம் மனு செய்துள்ளார். ஆனால் ஏன் இதுவரை பதில் கூறவில்லை? உங்களிடம் சோதனை செய்து, உறுதிப்படுத்த போதிய உபகரணங்கள் இல்லையா?
ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்?

கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்றவைகளை என்ன சோதனையின் அடிப்படையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்குகிறீர்கள்? இதுபோல் எத்தனை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது? ஏன் முடிவு சொல்லவில்லை’ என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.