தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள வணிகர்கள் நாளை மறுநாள் புதன்கிழமை

0
35

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள வணிகர்கள் நாளை மறுநாள் புதன்கிழமை (24.06.2020) முதல் மாலை 5 மணிக்கு கடையடைத்து தன்னையும் பொது மக்களையும் காத்துக் கொள்ளும்படியும் கடைகளில் நாம் வணிகம் செய்யும் பொழுதும் கண்டிபாக முக கவசம் அணிய வேண்டும். மேலும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 28.06.2020 அன்று மட்டும் இறைச்சி, கோழிக் கடைகள், மெடிக்கல் தவிர்த்து மற்ற எல்லா கடைகளும் முழு நேரம் அடைக்க வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் திருச்செந்தூர், பரமன்குறிச்சி, உடன்குடி, குலசை, சாத்தான்குளம், ஏரல், பழையகாயல், ஆத்தூர், முக்காணி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரபாண்டியப்பட்டிணம் ஆகிய பகுதிகளுக்கானது. இம்மாற்றமானது 24.06.2020 முதல் 30.06.2020 வரை அமல்படுத்தபடுகிறது. திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்