பொதுவான செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு இரண்டு விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு இரண்டு விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு ஸ்கோச் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கலந்துகொண்டு, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளின் புகைப்பட ஆதாரங்கள் மற்றும் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பரப்புரை பணிகள் ஆகிய விபரங்களுடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்றல் என்ற தலைப்பில் 06.02.2020 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டதால் தூத்துக்குடி மாவட்டம் காலிறுதிக்கு ஆர்டர் ஆப் மெரிட் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் தூய்மை பாரத இயக்கம் குறித்த ஆவணத் தொகுப்பு ஸ்கோச் இணையதளத்தில் இ எக்சிபிசன் ஆக பொதுமக்களின் பார்வையிட்டு மதிப்பீடு செய்து வாக்கு அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

பின்னர் இ ஸ்கோச் ( E-SKOCH) விருது வழங்கும் விழாவில் பிரதிநிதிகள் இணையதளம் மூலமாக பங்கேற்கும் நிகழ்வு டெல்லியில் வைத்து 20.06.2020 அன்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பாரத பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வாக்குகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தில் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட், ஸ்கோச் கோல்டு ஆகிய இரண்டு விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் செய்தியாளர்

சுரேஷ்

Related Articles

Back to top button