வடசென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள்.

0
15

வடசென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள்!


கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு MC Road பகுதியை சேர்ந்த 62 வயது பெண் இன்று (22.6.2020) திங்கட்கிழமை மரணம் அடைந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் SDPI கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீத் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.

தகவல் அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் வண்ணாரப்பேட்டை கொரோனா சேவை குழு அங்கு விரைந்து சென்று ஜனாஸாவுக்கான தொழுகை நடத்தி நல்லடக்கம செய்தனர். உடன் SDPI கட்சியின் ராயபுரம் நிர்வாகிகளும் இருந்தனர்.

உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, அனைத்து வகையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி PFI செயல்வீரர்கள் இந்த மணித நேய பணியை மேற்கொண்டனர்.