குற்றால சீசனை அனுபவிக்க சென்ற கொரோனா

0
19

குற்றால சீசனை அனுபவிக்க சென்ற கொரோனா
தென்காசி ஜூன் 23
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் சீசன் துவங்கி அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டிருந்தாலும் கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் குற்றாலத்தில் கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் 1 வது வார்டு பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைத்துச் சென்றனர்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வரத்தானே தடை. எனக்கு அல்ல என கொரோனா கூறுவது போல் உள்ளது.