சீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மாற்றிய ராகுல் காந்தி

0
50

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்தியா- சீன ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்..!

இதுகுறித்து சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்துள்ளது என குற்றம் சாட்டினார்..!


நேற்று முன்தினம் மத்திய பாஜக அரசை விமர்சித்த ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் இந்திய நிலப்பகுதியை சீன ஆக்கிரமிப்பிற்கு ஒப்படைத்துவிட்டார்..! அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் ஏன் நம் வீரர்கள் ஏன் கொல்லப்பட வேண்டும்? அவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள்?” என்று கேள்வி எழப்பினார்..!


அதுபோல் நேற்றும் ட்விட்டரில் மோடியை விமர்சித்துள்ள ராகுல் காந்தி “பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” என்று விமர்சனம் செய்துள்ளார்..!