நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்டணமின்றி இன்று ஒரு நாள் 5 ஆட்டோக்கள் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் இயக்கம்.

நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்டணமின்றி இன்று ஒரு நாள் 5 ஆட்டோக்கள் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் இயக்கம்

Advertisement

நடிகர் இளையதளபதி விஜய் அவர்களின் 46 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆலங்காயம் ஒன்றிய இளைஞரணி திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய கௌரவ தலைவர் N.மூர்த்தி அவர்களின் தலைமையில்,இளைஞரணி தலைவர் RCS சந்திரசேகர் முன்னிலையில்,செயலாளர் அஜித்குமார், பிரதாப்,கார்த்திக், மணி,சாமு ஆகிய இளைஞரணி உறுப்பினர்கள் சார்பாக நடிகர் விஜய் அவர்களின் பெயரில் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர் அத்துடன் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி வரை செல்லும் பொதுமக்களுக்கு 5 ஆட்டோக்கள் போக்குவரத்து கட்டணமின்றி இலவசமாக செயல்படும் என்று ஆலங்காயம் ஒன்றிய இளைஞரணி சார்பாக தெரிவித்தனர்

Show More
Back to top button