தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

0
17

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்சூழலில், இந்நோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனால் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், நோய்த்தொற்று அண்டாதவாறு முககவசங்கள் அணிந்தாலும் இந்நோயின் தாக்கமானது உலகையே உலுக்கிடும் அளவிற்கு உள்ளனர். பெரியோர்கள் முதல் பச்சிளம் குழந்தை வரை எந்தவொரு பாகுபாடில்லாமல் இந்நோய் தாக்கி வருகின்றது. குறிப்பாக கொரோனா வார்டுகளில் பணிபுரியும் செவிலிகர்களையும் மருத்துவர்களையும் மக்களை பாதுகாத்திட பணிபுரியும் காவலர்களையும் தாக்கி கொரோனா வின் கோரமுகத்தை காட்டிய வண்ணம் கோரதாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்செந்தூர் அருகே யுள்ள ஏரல் காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ,மற்றும் துணை உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டது இது அக்கராம பகுதிகளில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது, அதனை தொடர்ந்து அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது திருச்செந்தூர் காவல் துறையினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது..இதில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருச்செந்தூரில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது திருச்செந்தூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்